“நினைவலைகள்”
நெஞ்சுக்குழி நிரம்பி
நிறைமாச கர்பிணியாய்
வீங்கி போயிருக்கு
நீங்காத உன் நினைப்பு!
தங்கி நிரந்தரமா
தடமா பதிஞ்சிருச்சு
சல்ஸி கைரி எல்லாம்
சத்தியமா உன் நினைப்பே!
காத்திருந்து காத்திருந்து
கருவிழியும் வலிக்குதடி
கன்னி உனைக்காணாம
கண்மூட இமை மறுக்குதடி!
ஊட்டிவிட உனக்கு
என் விரல்கள் தவிக்குதடி
உண்ணமட்டும் முடியலடி
என்னைவிட்டு போனாயே!
முழுமூச்சு விட்டாலும்
முடிஞ்சமட்டும் சுவாசிச்சாலும்
அரை மூச்சா ஆகுதடி
ஆக்சிஜனே போக(த)லடி!!
-பிரஹா
Very deeply expressed.
Glad you got that! Thank you
Superb sir
Glad to know, thank you!
True feelings and nice way of expressing!
நினைவாக நீ இருக்கும் வரையிலும் நிம்மதி என்பது எனக்கில்லை.
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமில்லை
அன்புடன்
சரவணன்