வீரவணக்கம் | Brave Salute! | கவிதாஞ்சலி

5
3510

வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!
புண்ணிய பாரதப் புகழினைக் காக்க
எண்ணி லடங்கா ஏறுபோல் எம் வீரர்கள்
தன்னுயிர் துச்சமென தாய்நாடே உச்சமென
தாய்மண்ணின் மானம் காக்கும் மறவர்க்கு
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

வடக்கே உயர்ந்த இமயம் எல்லை
சரியாய் பிரித்த கோடுகள் இல்லை
வகையாய் கொடுப்பர் எதிரிகள் தொல்லை
சற்றயர்ந்தால் போய்விடும் தாய்மண் கொள்ளை!
உறைப்பனி மழையில் சளைக்காமல்
ஒரு நொடிப் பொழுதும் இமைக்காமல்
சிறு பிடி மண்ணும் இழக்காமல்
கடிபணி புரியும் காவல் தெய்வங்களுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

லடாக்கின் மகா தமனி போல் NH- ஒன்று
உலகின் உயரமான ராணுவ ஓடுதளம் இன்று
டவுலட் பெக் ஒலடி – தார்புக் தார் சாலை
இமயமலை மேடுகளை எழில் ரோடுகலாய்
தரமாய் செதுக்கும் நம் சிற்பிகள் வேலை
“BRO” என்றழைக்கப்படும் நமது “சகோ”தரர்களுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

சுதந்திர வேட்கை சுடரென பெருத்து
பரங்கியர் தலைகள் அடிமைத்தளை யென அறுத்து
விடுதலைக்கு வித்திட்ட வீரமகன்களுக்கும்,
அஹிம்சை வழியில் இம்சை செய்தே
அந்நியர் வென்ற அரும்பெரும் தியாகிகளுக்கும்
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்றே
பஞ்சபூதங்களாய் பாரதம் காக்கும்
அஞ்சாத முப்படை; ஈடில்லா இப்படைச்
சீருடைத் தரித்த தேவர், தேவதைகளுக்கும்
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

பல போர்களில் பாகிஸ்தான் கொண்டவர்
ஆம்! கார்கிலில் காலூன்றி நின்றவர்
கீழ் திசையில் பங்களாதேஷ் வென்றவர்
சீனத்தின் குள்ளநரிகளைக் குத்தியே கொன்றவர்!
ஆயுதம் தரிக்காமல் அறப்போர் புரிந்து
வீரம் சொரிந்து மரித்த, கால்வான் கனவான்களுக்கும்
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

பாச பிள்ளை அண்ணன் தம்பி
ஆசை கணவன் அப்பா என
அத்துணை உறவும் நித்தம் நித்தம் இழந்தும்
சித்தம் கலங்காமல் தாய் நாட்டிற்காக
கண்ணீரால் இன்றும் இரத்தம் சிந்தும்
எம் அன்னையர், தந்தையர், சகோதரிகளுக்கும்
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

இறுதியாய், இத்தகு தவப் புதல்வர்களை
ஈந்த எம் புனித மண்ணிற்கும்,
உறுதியாய், தம் தாய்த்திரு நாட்டை
உயிரென நேசிக்கும் நாட்டுப்பற்றுடைய
நல்லவர் அனைவருக்கும்
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!

ஜெய்ஹிந்த்

 

உங்கள் பிரஹா

5 COMMENTS

  1. “உறைப்பனி மழையில் சளைக்காமல்
    ஒரு நொடிப் பொழுதும் இமைக்காமல்”

    “லடாக்கின் மகா தமனி போல் NH – ஒன்று
    உலகின் உயரமான ராணுவ ஓடுதளம் இன்று”

    அருமை வரிகள் பிரஹா..

  2. The real genuine emotions and very nice expressions. Words are so apt and superb pronunciation!Brave Salute ATPiens Prahaa

  3. Very much informative and patriotic. This we need to inculcate to our next generations as well!Kudos Prahaa, Brave Salute to your efforts!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here