தமிழ்தாத்தா|உ. வே. சாமிநாதையர்| U.V.SwaminathaIyer|நினைவு நாள்

எங்கள் தமிழ் தாத்தனுக்கு நினைவு தினம்
தங்கள் தமிழ் பிள்ளைகளின் கவி சமர்ப்பணம்!!

“மூச்சிருக்கும் வரைத் தமிழை சுவாசித்து
தன்னுயிர் என நேசித்து போற்றியவனே
கரையான்கள் களவாடிய தமிழ் ஞானத்தை
அச்சிட்டு அரியணையில் ஏற்றியவனே

நீ ஆதீனம் ஆதீனமாய் அலையாமல் போயிருந்தால்
ஈராயிரம் ஆண்டுகளின் தமிழரின் பெருமைகள்
சுவாதீனம் இல்லாமல் சுவடியோடு ஒழிந்தே போயிருக்கும்!
பனை ஓலைச்சுவடிகளாய், வெறும் கையேடுகளாய்
மண்ணோடு மண்ணாகி மக்கித்தான் போயிருக்கும்

இளங்கோ கம்பன் கணியன் வள்ளுவன்
சிந்தாமணி சிலப்பதிகாரம் திருக்குறள் ஏனைய
அகம் புறம் ஆகிய நானூறும் எதுவும்
இன்று இல்லை, நீ மட்டும் இல்லை என்றால்!

தமிழரின் மங்கா பெரும் புகழ் காத்தவனே
தமிழ் மலரெனத் தவமாய் பூத்தவனே
தமிழுக்கு நீ செய்தாய் ஓயாமல் தொண்டு
தமிழ் இருக்கும்வரை தரணியில் உன்பெயரும் உண்டு!

தஞ்சை நிலத்தவனே தமிழ் காத்த மூத்தவனே
நெஞ்சம் நெகிழ்ந்து நினை நினைந்து மகிழ்கின்றோம்
தமிழ்தாத்தா எனும் உ வே சா நின் காலடிக்கு
நன்றியுடன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!”

உங்கள் பிரஹா

4 COMMENTS

  1. நம் தமிழ் மொழியின் அருமை பெருமை தெரியாத மூடர் கூட்டமே நம் தமிழ் நாட்டில் அதிகம் உலா வருகின்றனர்

    • சரியாக சொன்னீர்கள்! மேலும் பொய்களை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்!!

  2. நிலவை அழகாக்க இருளை பூசிக்கொண்டது இரவு

    அன்புடன்
    சரவணன்

  3. நிலவை
    அழகாக்க
    இருளை பூசிக்கொண்டது
    இரவு…

    அன்புடன்
    சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here