-கொரோனா-
நீ இயற்கையில் சுயமாய் அவதரித்தாயோ
அன்றி ஆய்வகம் என்ற
வாடகைத்தாயால் வளர்ந்து வந்தாயோ ?
காற்றின் திரவத்துளி வழி பரவுகின்றாய்
உலகின் மனித இனத்தையே நிரவுகின்றாய்
பண்டைக்கால பட்டுப்பாதை அறிந்த நாங்கள்
உன் தொற்றுப்பாதை அறியாமல் திகைத்து நின்றோம்!
மகுடம் பெயரிலேயே தரித்த மமதையால்
பேயாட்டம் ஆடுகின்றாய்
பெரும் கர்வம் கொண்டு, நுரையீரல் தின்று
தினம் கொத்து கொத்தாய் உயிர் சூடுகின்றாய்
மரணம் காக்க மருந்துகள் இல்லை
மரிப்பதைத் தவிர மானுடர்க்கு
மார்க்கம் இல்லை
கண்காணா அரக்கனே சற்றே
கருணைக் கொள் ஒழித்தது போதும்
கொஞ்சமேனும் ஓய்வு கொள்!
முட்புரதம் தனை அழித்தே நிச்சயமாய்
முறித்திடுவோம் இத்தொற்றை முற்றிலுமாய்
நெருங்கி விட்டோம் நினை
நிர்மூலமாக்கும் வழிகள் கண்டு
நிலைத்து நிற்போம் இப்பிரபஞ்ச
வெளியில் உன்னையும் வென்று …!
பண்டைக்கால பட்டுப்பாதை அறிந்த நாங்கள்- ancient silk route from China to western countries…. Linking covid-19 spread from China to western countries…. super
great to know that you got it right:-)! thank you
அருமை பிரஹா
மிகவும் அருமையாக சொன்னீர்கள் பிரஜா…
மிகவும் அருமையாக சொன்னீர்கள் பிரஹா…
மிக்க நன்றி