ஒரு உண்மையான இந்தியனாக, நாட்டுப்பற்றுடைய ஒரு குடிமகனாக நான் எப்பொழுதுமே எண்ணிப்பார்க்கும் ஒரு முக்கியமான விஷயம்; நம்நாடு, என் நாடு விடுதலை அடைந்தவுடன் குறைந்தபட்சம் 15-20 ஆண்டுகள் ஒரு ஜனநாயக நாடாக இருந்திராமல், மக்களால் பதவியிலிருந்து திருப்பி அழைக்கக்கூடிய அதிகாரம் பெற்ற “சோவியத் ஜனநாயகம்” போலவோ அல்லது ஒரு நல்ல தலைமை ஆளக்கூடிய “வழிகாட்டப்பட்ட ஏதேச்சியதிகாரமாகவோ” இருந்திருந்தால் இவ்வளவு அலட்சியமான, பொறுப்பற்ற, கீழ்த்தரமான, நாட்டுப்பற்று குறைந்த அல்லது அற்ற மக்களும், தலைவர்களும் உருவாகாமல் இருந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. நம் நாடு இன்னும் சிறப்பாக பல்வேறு துறைகளில் செழித்தும்,கொழித்தும், மக்கள் நலனையே பெரிதெனக் கருதும் தேசமாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்!
சரியான நேரத்தில் சரியானவை நிகழும் என்பதற்கு வரலாற்றில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு:- சேறும் சகதியுமாய் கிடந்த சிங்கப்பூர் என்ற ஒரு குட்டித்தீவும்! அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்த உத்தமத்தலைவன் “லீக்வான் யூ” என்ற அசைக்கமுடியாத ஆளுமையும்! ஆனால் அதற்கு மாறாக தவறிய நேரத்திற்கும், வாய்ப்புகளுக்கும் ஒரு உதாரணம் “நம் இந்திய நாடும்”, நேதாஜி சுபாஷ் சந்திர போஷும்!
இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு இருபது ஆண்டுகாலம் நாட்டை முன்னேற்றி விட்டு ஜனநாயகத்திற்கு திரும்பி இருக்கலாம்! அதை ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக செய்திருக்கலாம் என்ற கருத்து மேலோங்குகிறது என்னிடம்!
இந்திய விடுதலை போராட்டக் காலக்கட்டத்திற்கும், இந்தியா விடுதலை பெற்ற பின் நடந்தவற்றிற்கும் நிறைய முரணங்கள். மனிதன், மக்கள், இனம், தலைவன், சிந்தனை இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். விடுதலைக்கு பிறகு இவர்கள் நாட்டை ஆண்ட விதம், அடித்தக் கொள்ளைகள், அடக்குமுறைகள், அராஜகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பேறித்தனம், ஏமாற்றுதல், பொய், சாதி, மத அரசியல் இவை எதுவுமே தவறில்லை என்று எண்ணும் அளவுக்கு சுய அறிவு மங்கிய கூட்டம்! இத்துனணக் காலம் இந்த ஜனநாயக ஆட்சி மூளை மங்கிய, பொறுப்பற்ற, மிகவும் சுயநலம் நிறைந்த,தம் பரம்பரை அல்லது தமக்கு உண்டான அத்தனை பெருமையையும் இழந்து, அதைப் பற்றி சிறிது கூட கவலை இல்லாமல் இருக்கும் மக்களைத்தான் வளர்த்தெடுத்து இருக்கின்றது!
அறம், அறிவுரை எல்லாம் மற்றவர்களுக்கு தான் தமக்கு இல்லை என்ற மனநிலை தான் தற்போது நிலவி வருகிறது. யாரோ ஒருவன் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடுவான் என்பது போல், தான் திருந்தாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நமது அடுத்த தலைமுறையை நாம் சரியாக அமைக்காவிட்டால் கண்டிப்பாக நமது பெருமைகள் அழியும். இதுவே சரியான தருணம் அடுத்த சந்ததியினரை, வருங்கால தலைமுறையை முறையாக வளர்த்தெடுப்போம், தேசம் காப்போம்!!!
~ஜெய்ஹிந்த்
பின்குறிப்பு:-
இந்தப் பதிவு ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானதாகவோ அல்லது சர்வாதிகாரத்தை ஆதரித்தோ அன்று !
இன்னும் நம்நாடு வளரும் நாடகவே வழங்கப்படும் வருத்தத்தில்…
nice
I agree..
My brother suggested I might like this website. He was entirely right.
This post truly made my day. You can not imagine just
how much time I had spent for this info! Thanks!
Feel free to visit my page: Royal CBD
thank you for your support!